நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?

சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:– காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து…

Read More நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலையை அகற்ற உயர்நீதி மன்றம் ஒப்புதல் தருமா?

வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவித்துள்ளது. ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ‘ஆர்மிகெரஸ்’ கடித்தால் நோயெல்லாம் பரவாமல் வலி பின்னி எடுத்து விடுமாம். ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவ்வகை கொசுக்கள் வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம். செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள், தேங்கிக் கிடக்கும் மழை நீர் போன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும்…

Read More வட சென்னை மக்களை துரத்தும் கொசுக்கள்- தூக்கம் இல்லாமல் அவதி

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் முதல் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரசாரம் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளதால் காங்கிரஸ், பா.ஜ.கவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2087 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 733 பேர் களத்தில் உள்ளனர். இவர்களது வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் 346 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தலா 199 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இதில் பா.ஜ.க.வின் 199 வேட்பாளர்களில் 150 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல காங்கிரசின் 199 வேட்பாளர்களில் 139 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் 190 வேட்பாளர்களில் 35 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். கோடீசுவரர் வேட்பாளர்களில் காங்கிரசை சேர்ந்த விஸ்வேந்திர…

Read More ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கொடிஸ்வரர்களும் கிருமினல்களும் போட்டியிடுகின்றனர்

சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?

மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் ஏடிஎம் திருடனை ஆந்திர காவல் துறையினர் வலை போட்டு தேடி வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான். மற்றொருபுறம் பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இச்சம்பவமானது சிசிடிவி கமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த…

Read More சாமானியர்களை புறம் தள்ளும் சட்டமும் காவல் துறையும்-ஸ்ருதிக்கு நீதி ஜோதிக்கு எங்கே?

சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகாப்டரை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பொதுவாக ஹெலிகாப்டர்கள் புறப்படும் போதும், பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன. இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது. சத்தம் ஏதும் இல்லாமல், அதிர்வுகள் இன்றி பறக்கும் ஹெலிகாப்டரை ஜேர்மனியின் இ-வாலோ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் என்ஜினில் வாலோகாப்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு உலக நாடுகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டரை விமானத்தை போன்று செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே போன்று தரையிறங்கும் தன்மை கொண்டது. இதன் முதல் சோதனை பயணம் கடந்த 17ம் தேதி ஜேர்மனியில் உள்ள கரிஷ்ருக் பகுதியில் வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. German Company Continues Development Of Personal Electric Helicopter Proof-Of-Concept Aircraft Won…

Read More சத்தம் ஏதும் இல்லாமல் ஹெலிகாப்டர்கள்-ஜெர்மன் நிறுவனம்

மீண்டும் ஏமாற்றிய இயக்குனர் செல்வராகவன்-இரண்டாம் உலகம் விமர்சனம்

selvaraagan irandaam ulagam movie review இரண்டாம் உலகம் உண்மையில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி செல்வராகவனுக்கு கண்டிப்பாக கைத்தட்டலாம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த சிறிய தவறுகளை இந்த படத்தில் சரி செய்து இருக்கின்றார் படத்தின் கிரப்பிக்ஸ் மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும். அழகான பச்சை மஞ்சள் கலந்த நிறங்கள் நிறைந்த இடங்களை மேலும் அழகு படுத்தி காட்டயுள்ளார் ஆனால் மீண்டும் அவர் செய்த தவறு கதை கொடுக்கப்பட்ட விதம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் நிறைய பணத்தை போட்டு கிராபிக்ஸ் செய்து விடலாம் அனால் எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் நல்ல கதையை உருவாக்க முடியாது. இங்குதான் பெரிய இயக்குனர்கள் தோல்வி அடைந்து ஓரம் கட்டப் பட்டனர் ( பாரதி ராஜ , பாலச்சந்தர்,பாக்கியராஜ், கதிர், மணிரத்னம்,ect …) கதை…

Read More மீண்டும் ஏமாற்றிய இயக்குனர் செல்வராகவன்-இரண்டாம் உலகம் விமர்சனம்

5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்

11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…

Read More 5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்

நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..

Now, flying robot to save humans from drowning முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி  மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில்  மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர்  ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது. ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில்…

Read More நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..

தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…

DMK Chief M.Karunanithi criticized Jayalaitha Government of Tamilnadu that state of tamilnadu became “Minpagai” a enemy of Electricity against a previous statement of CM saying that Tamilnadu will become “Minmigai state” “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றம் பெறவில்லை, அதற்க்கு மாறாக ‘மின் பகை’ மாநிலமாக தான் மாறி இருக்கிறது’ என தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக ஞாயிறன்று வெளியிட்ட அவரது அறிக்கை பின் வருமாறு:- அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் உள்ளதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்படைந்த செய்தி ஒவ்வொரு தினமும் வருகிறது. வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் நிலக்கரி கொண்டுச்செல்லும் பாதையில் துவாரம் ஏற்பட்டு, அலட்சிய போக்கால், அதனை சீர் செய்யாமல் விட்டதால் கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச்…

Read More தமிழ்நாடு மின் மிகை அல்ல… மின் "பகை' மாநிலம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு…

இந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்

fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore   2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு…

Read More இந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்