முகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்

Kerala accused using Facebook in jail கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும் மேலும் சிலர்…

Read More

மீண்டும் ஏமாற்றிய இயக்குனர் செல்வராகவன்-இரண்டாம் உலகம் விமர்சனம்

selvaraagan irandaam ulagam movie review இரண்டாம் உலகம் உண்மையில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி செல்வராகவனுக்கு கண்டிப்பாக கைத்தட்டலாம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த சிறிய தவறுகளை இந்த படத்தில் சரி செய்து இருக்கின்றார் படத்தின் கிரப்பிக்ஸ் மட்டுமே இந்த வார்த்தை பொருந்தும். அழகான பச்சை மஞ்சள் கலந்த நிறங்கள் நிறைந்த இடங்களை மேலும் அழகு படுத்தி காட்டயுள்ளார் ஆனால் மீண்டும் அவர் செய்த தவறு கதை கொடுக்கப்பட்ட விதம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் நிறைய பணத்தை போட்டு கிராபிக்ஸ் செய்து விடலாம் அனால் எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் நல்ல கதையை உருவாக்க முடியாது. இங்குதான் பெரிய இயக்குனர்கள் தோல்வி அடைந்து ஓரம் கட்டப் பட்டனர் ( பாரதி ராஜ , பாலச்சந்தர்,பாக்கியராஜ், கதிர், மணிரத்னம்,ect …) கதை…

Read More

இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு

India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட்…

Read More

டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…

Read More

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பரவும் புதிய நோய்

தமிழக அரசின் இலவச திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து வாங்கிய மாடுகளால்தான் கோமாரி நோய் பரவியதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால்தான் கோமாரி நோய் பரவியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன. கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வருமானத்தை பெருக்கவும் அரசு விலையில்லா மாடுகளை வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்…

Read More

திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   abdul kalam admitted in hospital

Read More

வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.

கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை., இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில்…

Read More

நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்

ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…

Read More