தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதி மீறல் செய்ததாக எழுந்த புகாரில் சில வழக்குகளில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Arvind Kejriwal to contest against Sheila Dikshit in Delhi assembly polls