சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரத ரத்னாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் நபர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சச்சின் பேசியபோது, இந்த விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். பேராசிரியர் சிந்தாமணி நகேச ராமச்சந்திர ராவ் (சி.என்.ஆர். ராவ்), வேதியியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானி.இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சர் சி.வி.ராமன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தற்போது அவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவராக உள்ளார். செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்துக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர். 4 ஆண்டுகளுக்குப் பின் கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

1954 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 பேர் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு நேரு இந்திரா எம் ஜி ஆர் இவர்களுக்கு பிறகு சச்சின் பெறுகின்றார்.

கடைசியாக ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷிக்கு கடந்த 2009-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சச்சினுக்கும் சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 42-வது நபராக சி.என்.ஆர். ராவும், 43-வது நபராக சச்சினும் விருதினைப் பெற உள்ளனர்.

 

bharat-ratna-to-sachin

 

memorabilia

 

sachin-bharat-ratna

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=DvhNW6GwdRk

The government announced on Saturday, 16 November, that the country’s highest civilian order, the Bharat Ratna would be bestowed on cricket great Sachin Tendulkar and scientist, Professor Chintamani Nagesa Ramachandra Rao, the man behind India’s maiden Mars mission. Tendulkar will become the first sportsperson to receive a Bharat Ratna, India’s highest civilian honour, the country’s government announced hours after the batting great’s 200th and final test ended on Saturday.

Professor Chintamani Nagesa Ramachandra Rao is the third scientist to be awarded the highest civilian award– Bharat Ratna, a crowning glory of his list of outstanding achievements.
Cricket’s most prolific run-scorer bid an emotional farewell to the game at his home ground in Mumbai, ending a glittering 24-year career during which he bagged almost every batting record. A brief statement issued by Rashtrapati Bhavan spokesperson Venu Rajamony said the President has awarded the Bharat Ratna to Tendulkar.
Tendulkar bows out as the most successful batsman in international cricket with 15,921 runs in 200 Tests. In his ODI career, which he needed last year, Tendulkar amassed 18,426 runs in 463 matches.The Mumbaikar is the only batsman in international cricket to score 100 centuries. He was the first batsman to get a double hundred in one-dayers.
“Sachin Tendulkar is undoubtedly an outstanding cricketer – a living legend who has inspired millions across the globe,” Prime Minister Manmohan Singh’s office said in a statement. “During the last 24 years, since the young age of 16 years, Tendulkar has played cricket across the world and won laurels for our country.
“He has been a true ambassador of India in the world of sports. His achievements in cricket are unparalleled, the records set by him unmatched, and the spirit of sportsmanship displayed by him exemplary. That he has been honoured with several awards is testimony to his extraordinary brilliance as a sportsman.”
A perfect role model for the country’s youth and the sport worldwide with his impeccable image on and off the field, Tendulkar was nominated to the upper house of the Indian parliament last year.
He left the game after playing more test matches (200), scoring the most test (15,921) and one-day international (18,426) runs, and compiling more test (51) and one-day (49) hundreds than any other player in cricket history. (Reporting by Sudipto Ganguly; Editing by John O’Brien)
Third Scientist To Get Bharat Ratna
Professor Chintamani Nagesa Ramachandra Rao is the third scientist to be awarded the highest civilian award– Bharat Ratna, a crowning glory of his inexorable list of outstanding achievements.
Before Rao, C V Raman and former President A P J Abdul Kalam were bestowed with the award.
The 79-year-old Prof Rao has honorary doctorates from 60 universities that speaks volumes about the world wide acclamation and recognition that he has earned as a scientist par excellence.
Rao is the third scientist after C V Raman and former President A P J Abdul Kalam to be bestowed with the honour.
Rao, founder of the Bangalore-based Jawharlal Nehru Centre for Advanced Scientific Research, has served as Chairman of the Scientific Advisory Council to Prime Minister under different regimes, a manifestation of immense faith different governments have placed in him.
A renowned scientist and an institution builder, Rao has worked mainly in solid-state and structural chemistry.
Rao, born on June 30 in 1934 to Hanumantha Nagesa Rao and Nagamma Nagesa Rao in Bangalore, could have settled for a cushy job armed with a BSc in 1951 but his unsatiable quest for learning took him to the path of unending scientific journey.
The Bharat Ratna is being conferred after a gap of years with classical vocalist Pandit Bhimsen Joshi being the last recipient.

Related posts