British PM’s sudden rendezvous, savours famous Kolkata street food!
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதமர் ஓர் தெரு ஓரக்கடையில் வடையை வாங்கி சாப்பிட்டது அங்கே இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு.டேவிட் கேமரூன் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு போனார். அவரது அந்த பயணத்தின் நடுவே ஜோகாவில் இருக்கும் ஓர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடினார். அதற்கு பின், தூதரக அதிகாரிகளுடன் மத்திய கொல்கத்தாவில் உள்ள தெருக்கடைக்கு சென்று வண்டியை விட்டு இறங்கி. ‘விக்டோரியா வடா ஷாப்’ என்னும் கடைக்கு சென்றார். கொல்கத்தாவின் தெருக்கடை உணவை சுவைக்க நினைத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவரே வந்து கடையில் சாப்பிட்டது அங்கிருந்த மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
அக்கடையில் சட்னியுடன் வடையை ருசித்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அதற்கான 30 ரூபாயை தந்துவிட்டு புறப்பட்டார்.இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தன் கடைக்கு வருகைப்புரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கடையின் உரிமையாளர் ராஜேஷ் அகர்வால், பிரதமர் அளித்த 30 ரூபாயை பத்திரமாக வைத்துக்கொள்ளப்போவதாகவும், தன்னுடைய கடைக்கு மீண்டும் வருவதாக டேவிட் கேமரூன் தெரிவித்தாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.