சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More

தாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!

Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…

Read More

மத்தியப் பிரதேசத்தில் சென்ற ஓராண்டில் மட்டும் 10,577 குழந்தைகள் மாயம்

10,577 FIRs filed on missing children in one year, MP govt tells SC மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியப் பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 3370 பெண் குழந்தைகள்…

Read More

சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி

Two killed as portion of old building collapses in Chennai சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை பாரிமுனை மலையபெருமாள் கோயில் தெருவில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான பலசரக்குக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலசரக்குக் கடை ஊழியர் ராஜா (50), அருகிலுள்ள தேங்காய் கடையைச் சேர்ந்த சுபாஷ் (24), குமார் (50) ஆகிய மூவரும் இருந்தனர். அப்போது அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து, கிடங்கின் மேற்கூரை மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல்…

Read More

உலக நீரிழிவு நோய் நாள் – சர்வதேச சர்க்கரை நோய் தினம் – நவம்பர் 14

World Diabetes Day – Today.. சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியா, 2025ம் ஆண்டு, உலகத்தில் உள்ள மாற்ற நாடுகளை விட அதிகமான சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக இருக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும், 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும், பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 70 சதவீதம் பேர் சர்க்கரை நோயினால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று உலக…

Read More

இந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…

Read More

அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு

‘Miracle’ Woman Ruby Graupera-Cassimiro Survives After 45 Minutes Without Pulse பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(வயது 40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர்…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்

Chhattisgarh: Sterilisation surgery leaves 8 women dead, 55 still ‘in trouble’ சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் புறநகரில் பென்தாரி கிராமத்தில் நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அந்தப் பெண்கள் மருந்துகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களில் 29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சனை காரணமாக பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read More

இந்தியா பாகிஸ்தான் எல்லை சிந்து மாகாணத்தில் வறட்சியலும், சுகாதார குறைபாட்டாலும் 11 மாதங்களில் 275 குழந்தைகள் பலி

275 children dead poor health care pakistan sindh state indian border பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வறட்சியின் பாதிப்பாலும், சுகாதார குறைபாட்டாலும் 275 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள சிந்து மாகாணத்தின் தார்பார்க்கர் மாவட்டம், அகன்ற பாலைவனப் பிரதேசமாகும். இங்கு வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது கடந்த 1998 ஆம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. வானம் பார்த்த பூமியாக உள்ள தார்பார்க்கர் மாவட்டம், பெரும்பாலும் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளபோதிலும், காலத்தில் பெய்ய வேண்டிய பருவமழை, இப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒவ்வொரு ஆண்டும் வஞ்சித்தே வந்துள்ளது. இதனால், உண்டான வறட்சி மற்றும் சுகாதார குறைபாட்டின் விளைவாக ரத்தசோகை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தத்தில் நோய்க்கிருமித் தொற்று, பிறக்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறு போன்ற உபாதைகளால் கடந்த…

Read More

சீருடையுடன் ஊர்வலம் சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது

RSS workers arrested across Tamil Nadu ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஆர்.எஸ்.எஸ்., தொடங்கியதன் 90ஆவது ஆண்டு, விவேகானந்தரின் 159 ஆவது பிறந்த நாள், மற்றும் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், திருவண்ணாமலை காமராஜர் சிலை பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரண்டனர். பின்னர், தொண்டர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து ஊர்வலத்துக்குத் தயாராகினர். அப்போது, பாதுகாப்புக்காக வந்திருந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை…

Read More