மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

நீல திமிங்கலம் தமிழ்நாடு கடற்கரையில் கரை ஒதுங்கியது

திமிங்கலத்தின் நீளம் 20 மீட்டர் என்றும் அவை தற்போது அதன் வயதைக் காக்க முடியவில்லை என்றும் வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷா தெரிவித்தார். புதுடெல்லி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழகத்தின் வாலிநோக்கம் கடற்கரையில் இருபது மீட்டர் நீளமுள்ள நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது. பிரேத பரிசோதனை செய்த வன அதிகாரிகள், கடலில் திமிங்கலம் கப்பலில் மோதியதாக சந்தேகிக்கின்றனர். திமிங்கலத்தின் வயதை அவர்களால் கணக்கிட முடியவில்லை என்று வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷா ஞாயிற்றுக்கிழமை என்டிடிவிக்கு தெரிவித்தார். “இது ஒரு நீல திமிங்கிலம். நாங்கள் பிரேத பரிசோதனை முடித்துவிட்டோம். திமிங்கலம் ஒரு பெரிய கப்பலால் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று திரு பாஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் ஜூன் மாதத்தில், அதே மாவட்டத்தில் 18 அடி நீளமுள்ள, ஒரு கால் திமிங்கல சுறாவின் சடலம் கரைக்கு வந்தது.…

Read More

தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

பிலோலா: இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நாடேசாலிங்கம் தனி தனியாக படகு மூலம் 2012 மற்றும் 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியா சென்றனர்.பிறகு பிரியா மற்றும் நாடேசாலிங்கம் திருமணம் செய்து கொண்டு மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலா நகரத்தில் மூன்று வருடமாக வாழ்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோபிகா மற்றும் தருணிகா என்ற இரு பெண் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.அந்த இரு குழந்தைகளின் இப்போதைய வயது 4 மற்றும் 2 ஆகும்.அவர்களின் விசாக்கள் காலாவதியான பிறகு, குடும்பத்தை எல்லைப்படை அதிகாரிகள் மார்ச் 2018 இல் வீட்டிலிருந்து அகற்றினர்.அவர்கள் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு வரை இருந்தனர்.பிலோலா சமூகமும் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக நீதிக் குழுக்களும் குடும்பத்தை விடுவிக்க போராடியுள்ளன. இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான…

Read More

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Plea alleges GPay has no approval; Delhi High Court seeks response from RBI, Google India

இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…

Read More

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்ட வழக்கில் அவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

Read More

எத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி

Ethiopian Aircraft Crash: 157 Passengers Including 4 Indians and Crews dead

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காணாமால்போனதாக கூறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பயணிகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இவ்விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது என்றும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தனது…

Read More

அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின்  விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள்  டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.  அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Read More

நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு …. காட்மாண்டு, நவ. 29– நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை…

Read More

தாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!

Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…

Read More

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…

Read More