விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காணாமால்போனதாக கூறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பயணிகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இவ்விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது என்றும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தனது…
Read MoreTag: aircraft
பிரிட்டிஷ் விமான நிறுவனம் பிரெஞ்சு இளைஞர் பயணிக்க அனுமதி மறுப்பு
Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft ஒன்றரை வருடத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞன் தனது பெற்றோர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தார்கள். 20 வயதுடைய கெவினுக்கு உடலில் உண்டான ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் கனமாகி சுமார் 500 பவுண்டு எடையோடு இருந்தார். இந்த காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா வந்த கெவின் மேயோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை முடிவுக்கு வந்த பின் அவர்கள் தங்கள் நாடான பிரான்சிற்கு திரும்பிச் செல்ல மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். எனினும் விமான நிலையத்திற்கு பயணத்தேதியன்று வந்த…
Read More