திருமாவளவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு! சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

சென்னை:திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.அந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று திருமாவளவன் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து, திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து காவல்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்திரவிட்டார் .பிறகு அந்த வழக்கு விசாரணையை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related posts