ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Plea alleges GPay has no approval; Delhi High Court seeks response from RBI, Google India

இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…

Read More ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்ட வழக்கில் அவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம். இதையும் படியுங்கள் ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு சிறுமியை கடத்தி பலாத்காரம்…

Read More வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி

Ethiopian Aircraft Crash: 157 Passengers Including 4 Indians and Crews dead

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காணாமால்போனதாக கூறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பயணிகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இவ்விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது என்றும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தனது…

Read More எத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி

அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின் விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புதுடில்லி :அக்டோபர் 13, 2018 பேஸ்புக் நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.பேஸ்புக் கணக்கு வைத்திருப்போர்களின்  விவரம் அனைத்து தகவல்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஹேக்கர்கள்  டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.  அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ,அந்த விசாரணைக்கு பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை! கணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

Read More அதிர்ச்சித் தகவல்:பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது

நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

more than 5,000 buffaloes, sheeps, goats and other Birds animals slaughtered in Nepal animal sacrifice ritual நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை-ஆடுகள் கொன்று குவிப்பு …. காட்மாண்டு, நவ. 29– நேபாள கால்நடை பலி திருவிழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. நேபாள நாட்டின் பாரா மாவட்டத்தில் இருக்கும் பரியபூர் எனும் கிராமத்தில் கதிமாங் அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை மிகப்பெரிய கால்நடைகளை பலிகொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை பலி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாட்கள் மட்டும் நடக்கும் இந்த பலி திருவிழாவில் பல்லாயிரகணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. தலா ஓர் பன்றி, புறா, வாத்து, சேவல், எருமை போன்றவற்றை…

Read More நேபாள கால்நடை பலி திருவிழா : 5 லட்சம் எருமை – ஆடுகள் கொன்று குவிப்பு ….

தாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!

Lebanese takes selfie with dead mother… after digging up grave லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அதிலும்,…

Read More தாயின் சடலத்துடன் செல்பி எடுத்துகொண்ட மகன்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

40 people were killed in Afghanistan Volley ball tournament and about 60 people seriously injured ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இருக்கும் பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான (கை பந்து ) வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த கைபந்துப்போட்டியை காண ஏராளமான மக்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். அப்பொழுது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்ட பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டார்கள். மேலும் சுமார் 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.…

Read More ஆப்கானிஸ்தான் நாட்டில் கை பந்து (வாலிபால்) விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு 50 பேர் பலி, மேலும் 60 பேர் படுகாயம்.

மங்கள்யான் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஓன்று 'டைம்' பத்திரிகை பாராட்டு

Mangalyaan Among Best Inventions of 2014: TIME Magazine 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, யாருமே முதல் முறையில் செவ்வாய்க்கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா தோல்வி அடைந்தது. ஆனால் செப்டம்பர் 24ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கியது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய்கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் பட்டியலில் 2 இந்தியர்களின் கண்டுபிடிப்புகளும் இடம்பிடித்துள்ளன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read More மங்கள்யான் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஓன்று 'டைம்' பத்திரிகை பாராட்டு

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கடந்த 2011–ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை கண்டித்தும், 5 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்து, இலங்கைக்கான இந்திய தூதர் சின்கா அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம்…

Read More இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா  நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள். மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில்…

Read More ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.