அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்

Today is International Day for the Eradication of Poverty

Today is International Day for the Eradication of Poverty
Today is International Day for the Eradication of Poverty

உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. “ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். வறுமை, பட்டினி வன்முறைக்கு வழிவகுக்கிறது.

உலகில் ஏற்படும் மரணங்களில், அதிகம் வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமையினால் இறப்பவர்கள் அதிகம். உலகில் 87 கோடி பேர் போதிய உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. இதில் 40 கோடி பேர் சிறுவர்கள். 160 கோடி பேர் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிபேரின் (50 சதவீதம்) ஒருநாள் வருமானம் 150 ரூபாய்க்கு கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது.
என்ன காரணம்:மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் முக்கிய காரணம் ஏழை மக்களின் பசியை போக்குவதற்கு எந்த அரசுக்கு அக்கறையில்லாதது தான் முக்கிய காரணம்.

தேர்தலின் போது கட்சிகள் நிறைய வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்களின் பசியைக்கூட போக்க முன்வருவதில்லை. தங்களை செல்வந்தராக மாற்றிக்கொள்வதற்காகவே சிலர் பதவிக்கு வருகின்றனர். இதனை நாம் நேரடியாகவே பார்க்க முடிகிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. ஆனால் இப்போதிருந்து பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் தொடர்ந்து வறுமைக்கோட்டிலேயே வசிப்பதை தவிர்க்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினால் வறுமை ஒழியும்.

Today is International Day for the Eradication of Poverty

 

Related posts