வறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார் என தெரிவித்தார். புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில், குழந்தையை ஜோதிமணியே கொன்றுவிட்டு நாடகம் ஆடுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

In Erode the police have arrested a woman for killing her own child. In investigation it has come to know that she killed her child because, her husband is a alchohol adict.
In Erode the police have arrested a woman for killing her own child. In investigation it has come to know that she killed her child because, her husband is a alchohol adict.

போலீசில் ஜோதிமணி கொடுத்த வாக்குமூலம்: சம்பாதிக்கும் பணம் முழுவதையும் மது குடிப்பதற்கே கணவர் சத்யராஜ் செலவிட்டார். வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. மது குடித்து விட்டு வேலைக்கு போகாமலும் இருந்து வந்தார். வீட்டில் இருக்கும் பாத்திரம் போன்ற பொருட்களையும் விற்று மது வாங்கி குடித்தார். இதனால் அவருக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற கணவர் வீடு திரும்பவில்லை.

நேற்று அதிகாலை திவ்யதர்ஷினி பசியால் அழுதாள். ஆனால், பால் வாங்க கூட என்னிடம் பணம் இல்லை. ஏற்கனவே கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த நான், குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அதன் பின்பகுதியால் குழந்தை திவ்யதர்ஷினியின் தலையில் ஓங்கி அடித்தேன். அவள், ரத்த வெள்ளத்தில் பிணமானாள்.

பின்னர் மூத்த மகள் ஸ்ரீதேவியை நினைத்து தற்கொலை முடிவை கைவிட்டேன். பின்னர் திவ்யதர்ஷினியின் கொலையை மறைக்க திட்டமிட்டு, வீட்டில் இருந்த பழைய துணிகளை உடல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தேன். பின்னர், குழந்தையை கணவன் தான் கொன்றுவிட்டு ஓடிவிட்டார் என நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணியின் கணவர் சத்யராஜியிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Police have arrested a woman for killing her own child in Erode

In Erode the police have arrested a woman for killing her own child. In investigation it has come to know that she killed her child because, her husband is a alcohol addict.

Related posts