Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees
சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர். அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு வழங்கப்பட்டதில் 500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 570 பேர் நகைகளையும், 207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தேர்வு செய்தனர். அப்போது பேசிய தொலாக்கியா, தனது கனவுகள் அனைத்தையும் ஊழியர்களே நனவாக்கியதாகவும், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அவர்கள் எட்டியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இந்த வருடம் மட்டும் அக்கம்பெனி ஊழியர்களுக்கு 50 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees
A diamond merchant in Gujarat has gifted over 1,000 employees cars, homes and jewellery as Diwali bonus in a stunning act of generosity, Oprah-style. Savjibhai Dholakiya, an exporter based in the diamond city of Surat, says his workers deserve big rewards for their hard work and loyalty. About 500 employees opted for cars, 200 went for jewellery and some 300 accepted deposits on apartments as their annual incentive. The gifts were handed over on Sunday at a sprawling ground where brand new cars were lined up in neat queues. “These workers have been loyal to the company. They deserve it, they have put in hard work which has been reflected in their performance so they should be given the bonus,” said Mr Dholakiya, whose firm exports polished diamonds to 75 countries. The gifts are part of his company’s loyalty programme worth Rs. 500 crore, in which employees earn points in 25 criteria. Beneficiaries of the 55-year-old businessman’s largesse are thrilled and also moved. “My experience with the company has been indescribable. The jewellery which they have given me is not only priceless, it shows the sentiment that the company has towards me and other employees,” said Gaurav Duggal, who has been with the company for two years. Diwali is among India’s most popular festivals, marked by the trading of gifts that traditionally range from sweets, nuts and home appliances to cash and liquor. Most employees receive boxes of sweets, but one boss in Gujarat just redefined what is traditional.