தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு.
தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு முன்னணி நாயகர்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது தமிழ் சினிமா உலகம்.
அரசியல் பிரவேசம், விஜயகாந்துடனான பிரச்னை, என்று தடம் மாறிப்போய் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது சென்னையிலுள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படி படமாகும் காட்சிகளுக்கு முன்பு டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் வடிவேலு, ஏதாவது இடத்தில் அரசியலையோ அல்லது வேறு யாரையோ குத்திக்காட்டுவது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்குமாறு இயக்குனர் யுவராஜை கேட்டுக்கொள்கிறாராம். இது கதை சம்பந்தப்பட்டது, இதனால் ஒரு பிரச்னையும் வராது என்று அவர் சொன்னாலும். நாம் கதைக்காக வைத்தாலும், எனக்கு வேண்டாதவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்களைத்தான் நான் மறைமுகமாக திட்டுவதாக தவறாக எடுத்துக்கொள்வார்கள்.
அதனால் எதற்கு வீண்வம்பு என்று சொல்லி, ஆட்சேபத்திற்குரிய அனைத்து வசனங்களை நீக்கிவிட்டு, ஜனரஞ்சகமான, ஜாலியான வார்த்தைகளை உள்ளே திணித்து வருகிறாராம் வடிவேலு. மக்களின் மத்தியிலும் வடிவேலுவின் சிரிப்பு வெடிகளுக்கு இன்றும் அதிக எதிப்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிட தக்கது