பெங்களூர்:அக்டோபர் 27, 2018
‘விஸ்மயா’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் ‘மீடு’ ட்விட்டர் மூலமாக தெரிவித்தார். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை . பிறகு ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன்.
அதனால் ஸ்ருதி ஹரிஹரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது .நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்.