modi unveiled Mahatma Gandhi statue at Roma Park Street, Australia – Queensland ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குவீன்ஸ்லாந்து நகரில் இன்று நமது தேச தந்தை மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார். வெண்கலத்தால் செய்யப்பட்ட காந்தியின் இரண்டரை மீட்டர் உயரம் கொண்ட உருவச்சிலையை ரோமா ஸ்ட்ரீட் பகுதியில் திறந்து வைத்த மோடி பேசியதாவது:- குஜராத்தின் போர்பந்தர் நகரில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஒரு மனிதர் மட்டும் பிறக்கவில்லை. ஒரு சகாப்தமே பிறந்தது. தனது வாழ்நாளின்போது இருந்தது போலவே இன்றும் காந்தி நம்முடன் உயிர்ப்புடன் இருப்பதாகவே நான் அழுத்தமாக நம்புகிறேன். காந்தியின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் நாம் ஆராய்கையில் இன்று இந்த உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். ஒருவரின் சொல்லிலும், செயலிலும்…
Read More ஆஸ்திரேலியா வின் குவீன்ஸ்லாந்து நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியினுடைய சிலையினை திறந்து வைத்தார்.Category: உலகம் சிறகுகள்
உலக நீரிழிவு நோய் நாள் – சர்வதேச சர்க்கரை நோய் தினம் – நவம்பர் 14
World Diabetes Day – Today.. சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியா, 2025ம் ஆண்டு, உலகத்தில் உள்ள மாற்ற நாடுகளை விட அதிகமான சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக இருக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும், 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும், பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 70 சதவீதம் பேர் சர்க்கரை நோயினால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று உலக…
Read More உலக நீரிழிவு நோய் நாள் – சர்வதேச சர்க்கரை நோய் தினம் – நவம்பர் 14அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு
‘Miracle’ Woman Ruby Graupera-Cassimiro Survives After 45 Minutes Without Pulse பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ(வயது 40). பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு, சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்ததால், அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்துவிட்டது, எனவே உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. நாடித்துடிப்பும் குறையத் தொடங்கியதால் ரூபி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர், இதற்கிடையே பெண் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு, ரூபியின் உடலில் சிறு அசைவுகள் தென்படவே, மீண்டும் சிகிச்சை அளித்து உயிர்…
Read More அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்புஇந்தியா பாகிஸ்தான் எல்லை சிந்து மாகாணத்தில் வறட்சியலும், சுகாதார குறைபாட்டாலும் 11 மாதங்களில் 275 குழந்தைகள் பலி
275 children dead poor health care pakistan sindh state indian border பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வறட்சியின் பாதிப்பாலும், சுகாதார குறைபாட்டாலும் 275 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரமுள்ள சிந்து மாகாணத்தின் தார்பார்க்கர் மாவட்டம், அகன்ற பாலைவனப் பிரதேசமாகும். இங்கு வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது கடந்த 1998 ஆம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. வானம் பார்த்த பூமியாக உள்ள தார்பார்க்கர் மாவட்டம், பெரும்பாலும் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளபோதிலும், காலத்தில் பெய்ய வேண்டிய பருவமழை, இப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒவ்வொரு ஆண்டும் வஞ்சித்தே வந்துள்ளது. இதனால், உண்டான வறட்சி மற்றும் சுகாதார குறைபாட்டின் விளைவாக ரத்தசோகை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தத்தில் நோய்க்கிருமித் தொற்று, பிறக்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறு போன்ற உபாதைகளால் கடந்த…
Read More இந்தியா பாகிஸ்தான் எல்லை சிந்து மாகாணத்தில் வறட்சியலும், சுகாதார குறைபாட்டாலும் 11 மாதங்களில் 275 குழந்தைகள் பலிஉலகம் முழுவதும் உயிர் கொல்லி எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பாதிப்பு; 4,960 பேர் சாவு
ஜெனீவா: உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தாக்கி உலகம் முழுதும் சுமார் 13,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதில் 4,960 பேர் இறந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உயிர்கொல்லி எபோலா நோயினால் தக்கபட்டவர்களில் 70 சதவீதம் பேர் இறந்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுவதனால், நிஜத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்ககூடும் என அஞ்சபடுகிறது. ஆப்பிர்க்க கண்டத்தில் இருக்கும் லைபீரியா நாட்டில் எபோலா நோய் பாதித்த 6,619 நபர்களில் 2,766 பேர் உயிரிழந்துள்ளனர். சியரா லியோனிலுள்ள 4,862 எபோலா நோயாளிகளில், 1,130 பேர் உயிரிழந்தனர்.கீனியா நாட்டில், எபோலா தாக்கிய 1,760 பேரில் 1,054 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’Website’ type=’url’/][contact-field label=’Comment’ type=’textarea’…
Read More உலகம் முழுவதும் உயிர் கொல்லி எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பாதிப்பு; 4,960 பேர் சாவுபிரேசிலில் ஒருவரின் வயிற்றில் உயிருடன் 2 அடி மீன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
The stomach-churning moment a huge LIVE fish is removed from a man’s intestine பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார். அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன், கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர்,…
Read More பிரேசிலில் ஒருவரின் வயிற்றில் உயிருடன் 2 அடி மீன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்
Today is International Day for the Eradication of Poverty உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. “ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி,…
Read More அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்அக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
October 10 – World Day Against the Death Penalty உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறத 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003…
Read More அக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்இன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்
Total lunar eclipse to be partially visible in India இயற்கை அதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் பொழுது, பூமியின் நிழல், சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தால், சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் என்று மும்பை நேரு கோளரங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 5.54 நிமிடங்களுக்கு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் 11 நிமிடங்கள் மட்டுமே தென்படும். Total lunar eclipse to be partially visible in India A total lunar eclipse, the second and last one of this year,…
Read More இன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது
Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது லோகோவில் “O” எழுத்தும் “L” எழுத்தும் வளர்ந்திருப்பதுபோல் சிம்பிளாக லோகோவை வடிவமைத்துள்ளது. லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட கூகுள் சேவை உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் “தீமைத் தன்மை இல்லாதிருத்தல்” என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. அதனுடன் 30,000 மேற்பட்ட ஊழியர்களை நாடு முழுவதும் வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 16 வருடங்களில் கூகுள் அறிமுகபடுத்தியவை எவை, மற்றும் கூகுள் தொடர்பானவற்றை எமது சில முன்னைய பதிவுகளில் காணலாம். கூகிளிற்கு 15 வயது :…
Read More இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது