பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது

Coimbatore school Teacher stabbed to death by her drunked husband after suspecting her

கோவை : பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது.. கோவை ஆவாரம்பாளையத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோவில் வீதியில் வசித்துவருபவர் தனியார் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி (வயது 29) இவரது கணவரின் பெயர் சந்தோஷ்குமார் (வயது 30). சந்தோஷ் குமார் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர். இவரது மனைவி உமாமகேஸ்வரி அதே பகுதியில் இருக்கும் ஓர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாசினி (வயது 6) என்ற மகளும், விகாஷ் (வயது 5) என்ற மகனும், இருக்கின்றனர்.

Coimbatore school Teacher stabbed to death

முதலில் மனைவியின் மேல் பாசமுடன் வாழ்ந்து வந்த திரு.சந்தோஷ்குமார் நாளடைவில் மனைவி உமாமகேஸ் வரியின் மேல் வெறுப்பை காட்ட துவங்கி பின்னர் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் பின்னர் சந்தோஷ்குமாரின் பெற்றோர் வந்து சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சந்தோஷ்குமார் தான் பார்த்து வந்த பிட்டர் வேலையை இழந்தார். வேலையில்லா காரணத்தினால் மனமுடைந்த அவர், விரக்தியில் குடிபழக்கம் ஏற்பட்டு பின்னர் குடிக்கு அடிமையானார்.

இதற்கு இடையே மனைவி உமாமகேஸ்வரி எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகியது கணவர் சந்தோஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட துவங்கிய அவர் உமாமகேஸ்வரியை அடித்து உதைத்து உடலில் சூடுபோட்டு துன்புறுத்திவந்தார்.

கணவரின் சித்ரவதையை அனுபவித்து வந்த உமாமகேஸ்வரி தனது குழந்தைகளை அருகில் உள்ள தனது கணவரின் பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி கொண்டு போய் விட்டு விடுவது வழக்கமாக இருந்துவந்தது. கொலை சம்பவத்தன்று இரவு திருமதி.உமாமகேஸ்வரி வழக்கம் போல் தனது குழந்தைகளை சந்தோஷ் குமாரின் பெற்றோர் இல்லத்தில் விட்டு விட்டு தனியாக வீட்டில் இருந்தார். அப்பொழுது அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமாரை கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட அவர் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.

இதனிடையே குடிபோதையில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த கத்தியை வைத்து உமா மகேஸ்வரியின் கழுத்தில் குத்தினார். எதிர் பாராத இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

கொலைவெறி கொண்ட சந்தோஷ்குமார் ஆத்திரம் அடங்காமல் உமாமகேஸ்வரியின் நெஞ்சு, வயிறு, உள்ளிட்ட பல பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த கத்தி குத்தில் உமாமகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் விடியற்காலை வரை இரத்தவெள்ளத்தில் கிடந்த மனைவியினுடைய பிணத்தின் அருகிலேயே இருந்து பின்னர் அதிகாலை, கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு சென்று தான் மனைவியை குத்தி கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதனை தொடர்ந்து உதவி காவல் ஆணையர் திரு.பாஸ்கரன் தலைமையில் கண்காணிப்பாளர் கோபி, உதவி – கண்காணிப்பாளர் சாமியாத்தாள் ஆகியோர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனையடுத்து மனைவியை குத்தி கொலை செய்த சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்தார்கள். மேலும் அவரிடம் வேறு ஏதாவது காரணத்தினால் கொலை நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary : Coimbatore school Teacher stabbed to death by her drunk husband after suspecting her yesterday. 29th Aug.. Husband Santhosh kumar surrendered to Coimbatore Police.

Coimbatore school Teacher stabbed to death

Advertisements :

Visit Fashion Tailoring Institute : http://www.chennaifashioninstitute.com/

To Avail Property Monitoring Services : Visit http://www.bestsquarefeet.com/property-monitoring/

 

Related posts