தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட்

தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட் ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

‘ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

Related posts