பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று பாதுகாப்பு நலன் கருதி பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேரில் ஆஜராக்காமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் .அதில் திருநாவுக்கரசை நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவிட்டது
அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல்வேறு தகவல்களை திருநாவுக்கரசு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக வெளிவந்துள்ளன. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.