கர்நாடகாவில் 17 வயது இளம்பெண்ணைக் கற்பழித்து மயங்கிய அவரை பீரோவில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் இந்தப்பெண்.
இந்தப் பெண் தினமும் தனது சின்னம்மா வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கமாம். அதேபோல் நேற்று முந்தினமும் இரவு 10.30 மணியளவில் இவர் சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் இந்தப் பெண்ணை வழிமறித்து வாயில் துணியைத் திணித்து தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.
உறவினர்கள், நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது பீரோவின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் பீரோவை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.
ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் பீரோவின் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரோஜா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் ரோஜாவின் சித்தி சாக்கம்மா புகார் செய்தார். அதன்பேரில், நாகேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் அலி வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் நாகேசை பிடிக்க போலீசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
A woman in Karnataka was raped and was locked in a bureau
இதையும் படியுங்கள்
- விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று முதல் காஷ்மீரி பெண்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
- வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
அடுத்த செய்தி →: விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று முதல் காஷ்மீரி பெண்

