Gun rampage at Washington navy yard leaves 13 people dead
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று பேர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மிகவும் பாதுகாப்பான பகுதியான இங்கு தைரியமாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் நடத்தியவர்களில் 50 வயதான ஒரு வெள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ராணுவ உடையில் வந்த மற்ற இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவன் 50 வயதுமதிக்கத்தக்க கறுப்பர் என்று கூறப்படுகிறது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதையடுத்து தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ உடையில் வந்த அவர்கள் உண்மையான ராணுவ வீரர்கள் அல்ல. அவர்கள் எதற்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவில்லை என அந்நகர போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்த அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
Gun rampage at Washington navy yard leaves 13 people dead
A decorated military veteran opened fire at the Washington Navy Yard on Monday in a burst of violence that killed 13 people, including the gunman, and set off waves of panic at the military installation just miles from the White House and U.S. Capitol.