பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த திரைப்பட இயக்குனர் கைது

Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies . He have directed a Movie called Vachathi 

Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies

5 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்ததாக திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்! அவர் திருமணம் செய்த மனைவி துணைவிகளே அவரை காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர்.

5 பெண்களை கல்யணம் செய்து அவர்களை ஏமாற்றியதாக திரைப்பட இயக்குனர் “ஜஸ்டஸ் ரவி” கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருமணம் செய்த அந்த மனைவிமார்களே ஒன்று சேர்ந்து கண்ணி வைத்து பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை எனும் ஊரின் அருகில் உள்ள நெய்யூர் என்ற பகுதியை சார்த்தவர் “ஜஸ்டஸ் ரவி” அவருக்கு வயது 43. இவர் பிரபல தமிழ் திரை படங்களான ‘வாச்சாத்தி’, ‘பனிமலர்கள்’ ஆகியவற்றை இயக்கியுள்ளார். இவர் தக்களை எனும் ஊரின் அருகில் இருக்கும் சித்திரங்கோட்டையை சார்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு ஓர் பெண் குழந்தை உண்டு.

Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies 

இந்நிலையில் சினிமா டைரக்டர் ஜஸ்டஸ் ரவியினுடைய சில மர்மமான செயல்களில் மாற்றம் உண்டாகத்தொடங்கியது. அவர் சென்னைக்கு போவதாக சொல்லி அடிக்கடி இல்லத்திற்கு வராமல் வேறு எங்கோ தங்குவதாக கூறப்படுகிறது. அதனால், அவரது தினசரி நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அனிதா பால்நேசம் இது பற்றி ஆராயத்தொடங்கினார்.

இதன் பின்னணியில், பூதப்பாண்டி எனும் ஊரின் அருகில் இருக்கும் கீரிப்பாறை சுருளக்கோடு எனும் இடத்தை சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரி என்ற பெண்ணுடன் டைரக்டர் ஜஸ்டஸ் ரவி குடும்பம் நடத்துவது தெரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அனிதா பால்நேசம் அதிர்ச்சியுற்றார். அதே போல் ஜஸ்டஸ் ரவி பல பெண்களை ஏமாற்றி இறக்கக்கூடும் என்ற அனிதா பால்நேசமும், ஷீபாவும் சந்தேகம் கொண்டனர். மேலும், அருடைய கல்யாண லீலைகளை வெட்ட வெளிச்சமாக்குவது என்று உறுதி பூண்டனர்.
இது மோசடி பற்றி அவர்கள் இருவரும் இணைந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையில் சினிமா இயக்குனர் ஜஸ்டஸ் ரவியை பிடித்து கொடுக்க காவல் துறை அதிகாரிகள், அவரது மனைவிகள் அனிதா பால்நேசம் மற்றும் ஷீபா என்ற செல்வகுமாரி ஆகியோர் ஒன்றிணைந்து திட்டம் தீட்டினார்கள்.

அந்த திட்டத்தின் படி சென்னையில் தங்கி இருந்த டைரக்டர் ஜஸ்டஸ் ரவியுடன் அனிதா பால்நேசத்தின் குழந்தையை தொலைபேசியில் பேச வைத்தார்கள். காவல்துறையினர் கொடுத்த அறிவுரையின் படி, தந்தை ஜஸ்டஸ் ரவியுடன் குழந்தையை அன்புடன் பேசவைத்தார்கள்.

குழந்தையின் மழலை மொழியில் மயங்கிய ஜஸ்டஸ் ரவி சென்னையிலிருந்து தான் திருவனந்தபுரத்திற்கு விமானத்தின் மூலம் வருவதாக கூறினார். அந்த தகவலின் படி சென்னையில் இருந்து கிளம்பிய ஜஸ்டஸ் ரவி நேற்று அதிகாலை விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார். அவரை மனைவிமார்கள் அனிதா பால்நேசமும், செல்வகுமாரியும் இணைந்து ஒன்றாக அழைத்து காரில் கூட்டிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார்கள்.

வரும் வழியில், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் காம லீலை மன்னன் ஜஸ்டஸ் ரவியை கைது செய்தார்கள். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கம லீலை மன்னன் ஜஸ்டஸ் ரவி பல விதமான நிகழ்வுகளையும் தகவல்களையும் கூறி காவல்துறையினரையும், அவரது மனைவிமார்களையும் அதிர்ச்சியுட்டினார்.

அந்த அதிர்ச்சி தகவல் பின் வருமாறு:- சினிமா டைரக்டர் ஜஸ்டஸ் ரவி முதன் முதலில் பனச்சமூடு எனும் இடத்தை சார்ந்த சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கு பின்னர் 2-வதாக கேரளாவில் உள்ள கொட்டாரக்கரையை சார்ந்த பிந்து என்ற பெண்ணையும், 3-வதாக தக்கலை அருகில் இருக்கும் சித்திரங்கோட்டையை சார்ந்த அனிதா பால்நேசத்தையும், 4-வதாக கேரளாவை சார்ந்த திருமலை என்ற ஓர் பெண்ணையும், 5-வதாக சுருளக்கோடு என்னும் இடத்தை சார்ந்த ஷீபா என்று அழைக்கப்படும் செல்வகுமாரி என்ற பெண்ணையும் கல்யாணம் செய்துள்ளார். மேலும், தற்சமயம் மேல்மருவத்தூரில் இருக்கும் பூஜா என்ற இளம் பெண்ணோடு சேர்ந்து குடும்பம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

காவல்துறையினர் இவரது லீலைகளை வேறு எங்கெங்கு காட்டியுள்ளார் என்பதை விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணைக்கு பின் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அஞ்சபடுகிறது.

Cinema director Ravi arrested for guilty of cheating and marrying more than 5 tamilnadu and kerala ladies

Related posts