மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் பீகாரில் 3 பேர் பலி

Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district

Three killed by Naxalites in Gaya district of Bihar

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் அம் கோலா எனும் கிராமத்தினுள் நேற்று இரவு திடீரென்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தார்கள்.அப்பொழுது ஏராளமான மக்கள், அங்கே நடந்து கொண்டிருந்த ஒரு கலை நிகழ்ச்சியை கண்டு கிழித்து கொண்டிருந்தார்கள்.

அங்கே வந்து திடீரென கிராம மக்களை மாவோயிஸ்டுகள் முற்றுகையிட்டனர். பின்னர் அந்த கூட்டத்தில் இருந்த 7 பேரை மட்டும் கடத்திச்சென்றார்கள். அவர்களை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்றார்கள்.

கைகளை பின்புறமாக கட்டி காட்டுபகுதியில் அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். பின்பு தங்களிடம் உள்ள துப்பாக்கிகளால் கடத்தி வந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டனர்.

மாவோயிஸ்டுகளுடைய இந்த கொலை வெறி தாக்குதலுக்கு 3 கிராமத்தினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் சஞ்சய் யாதவ் ஆவார்.

சஞ்சய் யாதவ் இதற்கு முன்னர் மாவோயிஸ்டு இயக்கத்தில் ஒரு படைபிரிவை தலைமை தாங்கி பொறுப்பாளராக இருந்தவர். இவர் சில மாதங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டு இயக்கத்திலிருந்து விலகி அம்கோலாவில் வசித்து வந்தார்.

மாவோயிஸ்டு இயக்கத்தினரின் நடமாட்டம் பற்றி காவல்துறையினருக்கு முன்னாள் மாவோயிஸ்ட் சஞ்சய் யாதவ் ரகசிய தகவல் அளித்து வருவதாக மாவோயிஸ்டு உயர் மட்ட பொறுப்பாளர்கள் சந்தேகம் கொண்டதையடுத்து அவர்களின் உத்தரவின் அடிப்படையில் சஞ்சய்யாதவ் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சஞ்சய்யாதவை கொலை செய்வதற்கு முன்னர் அவருடைய துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் ஏராளமான வெடி மருந்துகளை மாவோயிஸ்டுகள் பறித்துக் கொண்டு சென்றனர். மேலும் சஞ்சய் யாதவுடைய வாகனகளுக்கு தீ வைத்து எரித்து சாம்பலாக்கி விட்டு தப்பி சென்றார்கள்.

Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district

At Amkola village, Gaya district, Bihar state, Maoists killed 3 villagers and injured many, Bihar police said on Monday.  The Maoists swooped on the Amkola village yesterday night, abducted 6 to 7 persons from an ongoing cultural programme. Then they took them away to a nearby forest area and fired at them indiscriminately, sub-divisional police officer Rajesh Kumar said.

In The gun shot 3 people were dead and many of them suffered severe injuries, the SDPO said.  Among the killed was a person called Sanjay Yadav, who recently deserted Maoist rank.  The killer Maoists also burnt Sanjay Yadav’s vehicle and took away his arms including a rifle, a pistol and around 100 cartridges, the SDPO said.  The Maoists were angry with Sanjay Yadav, whom they suspected to have leaked information to the police leading to several raids on ultra outfits and recovery of arms and ammunition.  The 3 people who suffered severe injuries have been admitted to Anugrah Narain Magadh Medical College and Hospital (ANMCH), the SDPO said.

Bihar naxalites Gun shot killed 3 villagers in Gaya district

Related posts