மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்லான கொடி, பேனர்களை பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவினால் அரசியல் கட்சியினரின் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்
News Headline: