Kerala planned new Pambar : T N government moved to the Supreme Court seeking directions to restrain Kerala from proceeding with the construction of a dam with a storage capacity of two tmcft across river Pambar at Pattissery in Idukki district. புதுடெல்லி: கேரளா அரசின் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் அமராவதி அணை 1958-ம் ஆண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. அமராவதி அணையின் மூலம் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும்…
Read MoreTag: supreme court
தமிழகத்தின் எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் குழு விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி புதிய வழக்கு
Petition requesting order to inquire Mineral resource related irregularities in tamilnadu by IAS officer Sagayam and Team at Madras High Court தமிழகம் முழுவதிலும் நடந்த எல்லா கனிம வள முறைகேடுகளையும் ஐ ஏ ஸ் அதிகாரி சகாயம் தலைமை தாங்கிய குழுவே விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் எனும் ஓர் சமூக சேவை அமைப்பைச் சார்ந்த திரு.அருள் எனும் நபர் இந்த இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமான முறையில் கனிமவளங்களை பயன்படுத்தியும் விற்றும் பலகோடிகளை ஏப்பம் விட்ட பல சமூகவிரோத செயல்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருவதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் மதுரையில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் முறைகேடு…
Read Moreஇந்தியாவில் நிமோனியாவல் 3.7 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்
Pneumonia and diarrhoea killed over 3 lakh children in India in 2013 இந்தியாவில் நிமோனியா நோயினால் ஒரு ஆண்டுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் குழும மாநில தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறும்போது, ”உலக நிமோனியா நோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிமோனியா என்பது நுரையீரலை நுண் கிருமிகள் தாக்குவதினால் ஏற்படும் நோய் ஆகும். பொதுவாக இந்த நோய் அதிகமாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவை 3 நாட்களில் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் 3 நாட்களுக்கு மேலும்…
Read Moreசாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்ட விரோதம் : உச்சநீதி மன்றம் தீர்ப்பு..
No Caste based census : Supreme court Judgement புதுடெல்லி, நவம்பர் : 07– சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி…
Read Moreநீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது
Case regarding legalization of Mercy Killing in Supreme Court நீதிமன்றம் மாநில அரசுகளிடம் கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? என்பதைக் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குணப்படுத்தவே முடியாத நோயால் துண்புருவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் கூறுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், “காமன் காஸ்” தொண்டு நிறுவனம் ஒன்று, மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள நோயாளிகளை அவர்கள் விருப்பினால், கருணைக் கொலை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு கொடுத்துள்ளது. இந்த மனு, அரசியல் சாசன அமர்விலுள்ள ஆர்.எம்.லோதா, ஏ.கே.சிக்ரி, சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் முன்பு வந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாரர் சார்பில் ஆஜரானார். அவர், “உச்ச நீதிமன்றத்தில் முன்பே இந்த…
Read More5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்
11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…
Read Moreமும்பை பார்களில் அழகிகள் டிஸ்கோத்தே: நீதிமன்றம் அனுமதி
dance bars in maharashtra மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது, இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. இந்த தடையை எதிர்த்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், இதனை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் பார்களை மீண்டும் திறந்து ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு…
Read More