11,820 custodial deaths in 5 years
லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:-
குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப் மரணத்தை தடுக்கவும் மற்றும் விசாரணையை ஒழுங்குபடுத்தவும் மேலும் 15 வழிகாட்டுதல்களை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய சிங்கி, நீதிபதிகள் முன் விதிமுறைகளை சமர்ப்பித்தார். லாக்அப் மரணங்கள் பற்றி கவலை தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
11,820 custodial deaths in 5 years
11,820 custodial deaths in 5 years
இதையும் படியுங்கள்
- சிரியா போரில் இதுவரை பதினொரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
- வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்
- நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..
- தீபாவளி 2026: பட்டாசு வெடிக்கும் நேரம், பசுமைப் பட்டாசு விதிகள், மீறினால் என்ன நடவடிக்கை?
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கோயில் நிலம் அன்பளிப்பு செல்லாது: ஈரோடு மாரியம்மன் கோயில் நிலத்தை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொடுத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தலாக் வழிகாட்டுதல் மனு: அனைத்து வகை தலாக்குக்கும் வழிகாட்டுதல் கோரும் மனுவில் மத்திய அரசின் பதிலைக் கேட்டது உச்ச நீதிமன்றம்
← முந்தைய செய்தி: நீரில் மூழ்குபவர்களை மீட்க புதிய வகை ரோபோ..
அடுத்த செய்தி →: மீண்டும் ஏமாற்றிய இயக்குனர் செல்வராகவன்-இரண்டாம் உலகம் விமர்சனம்

