a girl at meerut single handedly beat two eve teasing youths
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பல கோணங்களில் பேச்சுக்கள் நடந்து வரும் வேளையில் 13 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகளுடன் தந்தை பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது பைக் ஒரு கார் மீது உரசியது.
இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். இந்நிலையில் தந்தை தாக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுந்தாள் மகள். இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை விட்டார். சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
a girl meerut single handedly beat two eve teasing youths
It is indeed back of ‘goonda raj’ in Uttar Pradesh. No other thought will reflect in your mind after knowing how goons misbehaved with a girl and her father at a crowded chowk in the Meerut city.
Advertisement : Bestsquarefeet Property Management Monitoring Company…