சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More

உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ

Rail Engine got fire suddenly in Uttar Pradesh உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேசத்திலிருந்து புறப்பட்ட கோண்டா–பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில், ரிசியா என்ற இடத்தில் இரவு 10.30 மணிக்கு என்ஜினில் திடீரென தீ பிடித்தது. இப்படி திடீரென பற்றிய தீயால் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். சில பயணிகள் பீதியில் ரெயில் பெட்டிகளிலிருந்து வெளியே குதித்தனர். இத்தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த ரெயில்வே அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் என்ஜினில் பிடித்த தீயை 2 மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு அணைத்தனர். அதன்பின் மற்றொரு என்ஜினை பொருத்தி இரவு 2.55 மணியளவில் கோண்டா-பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென்றும் மேலும் இதைப் பற்றி உரிய விசாரணை மேற்க்கொல்லப்படும் என்றும்…

Read More

5 ஆண்டுகளில் லாகப் மரணம் : 11,820 பேர்

11,820 custodial deaths in 5 years லாக்அப் சாவுகளை தடுத்தல், விசாரணைக்கு தேவையான ஒழுங்கு விதிமுறைகளை உண்டாக்குதல் ஆகியன சம்பந்தமாக டி.கே.பாசு என்ற நபர் உச்ச நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 27 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சிங்வி ஆஜராகி கூறியதாவது:- குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் காவல்துறையின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லாக்அப்…

Read More

உத்தரபிரதேசத்தில் தேர்வில் தோல்வியுற்ற சி.ஏ மாணவர் தற்கொலை

CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station   உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இளைஞர் தனது பெற்றோர்கள் கண் முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர் ராகுல் (வயது 21) சி.ஏ தேர்வில் கடுமையாக முயன்று படித்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தனது பெற்றோர்கள் திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத தற்கொலை முடிவை எடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர்  ராகுல் (வயது 21). சி.ஏ படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரை அவரது பெற்றோர்கள் திட்டியுள்ள்ளர்கள். இதனால் மனமுடைந்து ஆத்திரப்பட்ட அவர் வீட்டைவிட்டே வெளியேறினார். இதை தொடர்ந்து மாணவர்  ராகுலின் தந்தை…

Read More