சோனியா – ராகுல் கிராமங்களை தத்து எடுத்தனர் : பிரதமர் மோடி திட்டம் நிறைவேற்றம்.. "Saansad Adarsh Gram Yojana"

“Saansad Adarsh Gram Yojana” Village adoption Plan by Prime minister Narendra Modi followed by Sonia Ghandhi and Raghul Gandhi. ரேபரேலி, பிரதமர் மோடியின் திட்டமான கிராமங்களை தத்து எடுத்தல் திட்டப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கிராமங்களை தத்து எடுத்தார்கள் . ‘ஆதர்ஷ் கிராம யோஜனா’ பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம்… இந்த கிராமத்தை தத்து எடுக்கும் திட்டத்தின் கீழ், பாராளுமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிராமத்தை தத்து எடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தியும், அவருடைய மகன் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருமான திரு.ராகுல் காந்தியும் பின்பற்றியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் ஜாகாத்பூர் பகுதியில் உத்வா கிராமம் இருக்கிறது.…

Read More

கனிமொழி, தயாளு அம்மாளிடம் நாளை 2ஜி ஊழல் வழக்கு விசாரணை!

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal. சென்னை: கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறயிருக்கிறது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில்  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தயாளு அம்மாளுடைய உடல்நிலை காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையினுடைய பரிந்துரையின் படி தயாளு அம்மாள் வீட்டிற்கு எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி நேரடியாக போய் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (28–ந்தேதி) காலை சுமார்…

Read More

இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal திண்டுக்கல், ஜூலை. 24- தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார். அவரிடம் தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடியே 1 லட்சத்தை மாவட்ட செயலாளர் எல்.மூக்கையா வழங்கினார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது, தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிதியளிப்பு கூட்டங்களில் இங்குதான் அதிக கூட்டத்தை பார்க்கிறேன். நிதி வழங்கிய தொகையின் மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் தேனியில் நிதி குறைவாக கொடுத்து இருந்தாலும் இங்கு வந்திருக்கும் மக்களின் எழுச்சியில்…

Read More

மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…

Read More