மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார்.

வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார். காலை 11.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதன்பின், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். ஆளும் அதிமுகவில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் தலைமையில் ஒவ்வொரு அமைச்சருக்குக் கீழும் எம்.எல்.ஏ.க்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.  தேமுதிகவின் அதிருப்தி  எம்.எல்.ஏ.க்கள்  7பேரும்  அதிமுகவிற்கு வாக்கு அளித்து இருக்கலாம் என  செய்திகள் தெரிவிக்கின்றன  அவர்கள் அனைவரும்  தனித்  தனியாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்திருந்தது. இதனால், 234 எம்.எல்.ஏ.க்களுக்குப் பதிலாக 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்குப் பதிவில் பங்கேற்றனர்.மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதன்பின் வாக்குகளை எண்ணும் பணி, வாக்குப் பதிவு நடந்த அறையிலேயே நடைபெற்றது. மாலை 6.17 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது.

பதிவு செய்யப்பட்ட 231 வாக்குகளில் 230 வாக்குகள் செல்லத்தக்கவை. ஒரு வாக்கு செல்லாத வாக்காகும். செல்லத்தக்க வாக்குகள் அடிப்படையில், வெற்றிக்கான குறைந்தபட்ச வாக்கு மதிப்பு 32.86 என நிர்ணயிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.அர்ஜுனன், வா.மைத்ரேயன், டி.ரத்தினவேல் ஆகியோர் 36 வாக்கு மதிப்பையும், ஆர்.லட்சுமணன் 35 வாக்கு மதிப்பையும் பெற்று வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா 34 வாக்கு மதிப்பை பெற்று வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிக்குத் தேவையான குறைந்தபட்ச வாக்கு மதிப்பை பெறாவிட்டாலும், தேமுதிக வேட்பாளர் ஏ.ஆர்.இளங்கோவனை விட அதிக வாக்கு மதிப்பைப் பெற்றார்.

இளங்கோவன் 22 வாக்கு மதிப்புகளையும், கனிமொழி 31 வாக்கு மதிப்பையும் அதிகம் பெற்றிருந்தார் எனவே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இருவரில் கனிமொழி அதிக வாக்கு மதிப்பைப் பெற்றதால் ஆறாவது இடத்துக்கான போட்டியில் கனிமொழி வெற்றி பெற்றார் என ஜமாலுதீன் அறிவித்தார். வெற்றி பெற்ற 6 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று வெற்றிக்கான சான்றிதழ்களையும் அவர் அளித்தார்.

கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக) 36,

வா.மைத்ரேயன் (அதிமுக) 36,

டி.ரத்தினவேல் (அதிமுக) 36,

ஆர்.லட்சுமணன் (அதிமுக) 35,

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) 34,

கனிமொழி (திமுக) 31,

ஏ.ஆர்.இளங்கோவன் (தேமுதிக) 22,

செல்லாத வாக்கு 1

 admk dmk won the Rajya Sabha election

Related posts