குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பிப்ரவரி 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையும் படியுங்கள்
இதையும் படியுங்கள்

← முந்தைய செய்தி: வழக்கறிஞர்கள் சார்பாக விளம்பரம் செய்வதால் ஆன்லைன் போர்ட்டல்களுக்கு அவதூறு நோட்டீஸ் -அலகாபாத் உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை -ஹரியானா நீதிமன்றம்

Related posts