கனிமொழி, தயாளு அம்மாளிடம் நாளை 2ஜி ஊழல் வழக்கு விசாரணை!

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal.

சென்னை: கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறயிருக்கிறது.

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal.

உச்சநீதிமன்ற மேற்பார்வையில்  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தயாளு அம்மாளுடைய உடல்நிலை காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையினுடைய பரிந்துரையின் படி தயாளு அம்மாள் வீட்டிற்கு எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி நேரடியாக போய் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (28–ந்தேதி) காலை சுமார் 10 மணிக்கு சாட்சியத்தை பதிவு செய்ய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. எழும்பூர் நீதிபதி நாளை காலை தயாளு அம்மாள் வீட்டிற்கு போகிறார். அவரது சாட்சியம் அங்கே பதிவு செய்யப்படும். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசாவின் சார்பில் அவருடைய  வழக்கறிஞர், கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குனர் சரத்குமார், கனிமொழி எம்.பி., கரீம்மொரானி, ஆசிப்பல்வா ஆகியவர்களும் நீதிபதியின் முன் நேரில் ஆஜராகின்றார்கள்.

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal.

Related posts