நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை -ஹரியானா நீதிமன்றம்

ஹரியானா:குற்றவாளி மஹிபால், நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அக்டோபர் 13, 2018 அன்று நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோரை குருகிராமில் உள்ள ஆர்கேடியா சந்தைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவர் இருவரையும் பொது மக்கள் முன் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கு நீதிபதி சுதீர் பர்மர் முன் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதீர் பர்மர், நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கினார்.

Related posts