கணவரை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

தேவதானப்பட்டி: கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன் முகமது யாசிக்கையே ஏற்பாடு செய்தார். டம்டம் பாறை அருகே சாலையோரத்தில் முகமது யாசிக் மற்றும் பிர்தோஷ் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பிறகு மலைப்பகுதியில் இருந்து தள்ளிவிட்டுச் சென்றனர். இவர்கள் கொலை செய்துவிட்டு மங்களூரில் பதுங்கியிருப்பது போலீஸ்க்கு தெரியவந்தது. இதையடுத்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் மங்களூர்சென்றனர். அங்கு பதுங்கியிருந்த பிர்தோஷ் மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமதுயாசிக் ஆகியோரை 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பாலக்காபாடி காஞ்சிபட்டா ஜேஎம் ரோடு பகுதியை சேர்ந்த முகமது சமீர்(32) என்பதை கர்நாடக போலீஸ் உறுதி செய்தனர்.

தேவதானப்பட்டி: அக்டோபர் 09, 2018

கடந்த செப். 18ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள காட் ரோடு டம்டம் பாறை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது. தேவதானப்பட்டி போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிர்தோஷ்க்கு (27) முகமது சமீர்(32) உடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.இவர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். முகமது சமீர் வருடத்துக்கு ஒரு முறை வருவது வழக்கம் .இதனால் பிர்தோஷூக்கும் கார் டிரைவர் முகமது யாசிக்கிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பிர்தோஷ் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .தனது கணவருடன் ஆலோசித்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார். தங்கள் செல்லும் கொடைக்கானல் பயணத்துக்கு கார் டிரைவராக கள்ளக்காதலன் முகமது யாசிக்கையே ஏற்பாடு செய்தார்.

டம்டம் பாறை அருகே சாலையோரத்தில் முகமது யாசிக் மற்றும் பிர்தோஷ் சேர்ந்து முகமது சமீரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பிறகு மலைப்பகுதியில் இருந்து தள்ளிவிட்டுச் சென்றனர். இவர்கள் கொலை செய்துவிட்டு மங்களூரில் பதுங்கியிருப்பது போலீஸ்க்கு தெரியவந்தது. இதையடுத்து தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் மங்களூர்சென்றனர். அங்கு பதுங்கியிருந்த பிர்தோஷ் மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமதுயாசிக் ஆகியோரை 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பாலக்காபாடி காஞ்சிபட்டா ஜேஎம் ரோடு பகுதியை சேர்ந்த முகமது சமீர்(32) என்பதை கர்நாடக போலீஸ் உறுதி செய்தனர்.

Related posts