நொய்டா: அக்டோபர் 11, 2018
நொய்டா பக்கத்தில் சப்ரவுலா என்கிற கிராமத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டு சிறுவனை அடிக்கடி அந்த பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார்.
அந்த சிறுவன் இதனால் அதிர்ச்சியும் பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். ஒரு நாள் அந்த பெண் தன்னுடன் உறவுக்கு அந்த சிறுவனை வற்புறுத்தி இருக்கிறார் . ஆனால் அந்த சிறுவன் மறுத்ததால் ஆத்தரமடைந்த பெண் அடுப்பறைக்குள் சென்று ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது கொண்டே தன் அம்மாவிடம் அனைத்தையும் சொன்னான்.
பாலியல் தொல்லை பற்றி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். பக்கத்து வீட்டு பெண் தன் மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இதை அறிந்த அந்த பெண் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்ஸோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.