தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader

இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது  தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது.

இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.
ஒரு கடற்கரையில் மேலாடை ஏதும் இன்றி தண்ணீருக்குள் உட்கார்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் ஒரு வெள்ளைத் துணியால் போர்த்தி இழுத்து வரும் காட்சி அத வீடியோவில் பதிவாகியுள்ளது.
இலங்கை ராணுவ வீரர்கள் ஆறு பேர் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை பிடித்து இழுத்து வருவதும் அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என அவரைக் கூறுவதும் அதற்கு அவர் ஐயோ அது நான் இல்லை என அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால், செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிருடன் கைது செய்யப்பட்டு  படுகொலை செய்யப்பட்டது உறுதியாகியிருக்கிறது. வெள்ளைத் துணியை  போர்த்திய நிலையிலும், துணி இல்லாத நிலையிலும் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் சடலம் கிடந்த காட்சிகள் இதற்கு முன்பே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையினில் இந்த புதிய போர்க்குற்ற வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது அந்த நாட்டுக்கு மாபெரும் நெருக்கடியினை உண்டாக்கும்.

English Summary : New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader and presenter is a stark reminder of Sri Lankan army cruelty. Until now they insisted News reader Isaipriya died in War combat

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader
.

Related posts