புலிகள் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு திடீர் தடை

Tamil tiger leader Prabakaran Birthday celebration banned  in srilanka even after 4 years of  his dealth

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவீரர் தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது.

Prabahakaran Birthday celebration banned even after 4 years after his dealth in srilanka

இந்நிலையில், மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக நீடிக்கிறது. எனவே, புலிகளைக் கொண்டாடும் எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

“பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்பும் பணிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டால் சட்டப்படி அது குற்றம்” என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாகாண தேர்தலில் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான மாவீரர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டதால், தமிழ் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இறந்தவர்களை நினைவுகூர்வதை தடை செய்ய இலங்கையில் எவ்வித சட்டமும் இல்லை: த.தே.கூட்டமைப்பு

இறந்தவர்களை நினைவுகூர்வதை தடை செய்ய இலங்கையில் எவ்வித சட்டமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே பொலீசாரோ, இராணுவத்தினரோ அவ்வாறு தடை விதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மாவீரர் தின அனுசரிப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரின் அறிவித்தல் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

“விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என இவர்கள் கூறி வருகின்றனர். மாவீரர் தினத்தில் நினைவுகூர்வது புலிகளை மாத்திரமல்ல. 30 வருட யுத்தத்தில் உயிர் நீத்த பொது மக்களையும்தான். அப்படி பார்த்தால் யுத்தத்தில் அதிகம் பொதுமக்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தமது பிள்ளைகளை நினைவுகூர்வது அந்த மக்கள் அடிப்படை உணர்வு ரீதியானது. அதற்கு தடை விதிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கூட அவ்வாறு தடை செய்ய ஏற்பாடுகள் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகூட இடிக்க முடியாது என ஐநா சாசனத்தில் உள்ளது. ஆனால் இலங்கையில் உடைக்கின்றனர்.

அரசாங்கம் தமிழ் மக்களுடன் நல்லுறவை பேண விரும்புவதாக அடிக்கடி சொல்கிறது. அப்படியானால் முதலில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அமைச்சர்கள் அல்லது இராணுவத்தினரின் பிள்ளைகள் இறந்திருந்து அவர்களை நினைவுகூர அரசாங்கம் தடை விதிக்குமா? இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Tamil tiger leader Prabakaran Birthday celebration banned  in srilanka even after 4 years of  his dealth

Related posts