தாம்பரத்தில் பெண்ணை கொன்று விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் கைது

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) மற்றும் அவரது கணவர் தாம்பரத்தில் குணசேகரன்(54) என்பவரின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள்.குணசேகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் இருப்பதால் அதை பராமரித்து வந்தார்கள்.தேவி மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திடீர் என இருவரும் காணவில்லை.குணசேகரன் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்து இதை பெரிதாக நினைக்கவில்லை.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலையில் குணசேகரன் நிலத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் தொட்டியில் பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த தேவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலை கைப்பற்றிய காவல்துறை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சமந்தமான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தேவிக்கு முருகன் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும்,மணிகண்டன் (42) என்பவருடன் தேவி கள்ளத்தொடர்பு வைத்துள்ளதும் தெரியவந்தது.கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த முருகன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால், தேவி சென்னைக்கு வந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தேவி அடிக்கடி பணம் பெற்று திருப்பி தராததால் ,மணிகண்டன் தேவி சென்னையில் வேலை செய்யும் இடம் தெரிந்து வந்துள்ளார். வந்த இடத்தில் தான் தேவியின் கணவர் என்று கூறியுள்ளார் .திரும்பி பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் மணிகண்டன் தேவியின் கழுத்தை நெறித்து கொன்று விட்டு உடலை அங்கிருந்த கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் வீசிவிட்டு தப்பித்தார்.தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related posts