ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்

ஆதாரை ஹேக்கிங் செய்ய பயன்படும் சாஃப்ட்வேர் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக  சாஃப்ட்வேர் ஆய்வு செய்து ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம்(UIDAI) தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், ஆதார் என்ரோல்மெண்ட்டை ஹேக் செய்ததாக கூறப்படும் செய்திகள் தவறானது என்றும், அடிப்படையில்லாத ஆதாரமற்ற செய்தி என்றும் கூறியுள்ளது.

Related posts