கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,’ என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான் டாக்டர் என கூற தொடங்கினேன்’ என்றார்.
இதையும் படியுங்கள்
- ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்
- புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்
- கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு!. தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!.
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு!. தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!.
அடுத்த செய்தி →: ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்

