சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர் அப்பகுதி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இதனையடுத்து கணவனை பிரிந்த புவனேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் புவனேஸ்வரி.தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கவுதமன் விவாகரத்து கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் புவனேஸ்வரி கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். தான் சேர்ந்து வாழ ஆசை உள்ளதாக புவனேஸ்வரி, கவுதமனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து புவனேஸ்வரி எழுதி வைத்துள்ள கடிதத்தில், கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். இதற்காக அவரை தேடி சென்றேன். ஆனால் என்னை திட்டி அனுப்பி விட்டனர்.எனது மரணத்திற்கு கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான கவுதமனை போலீசார் தேடி வருகின்றனர்.