புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்

சென்னை : 14th செப்டம்பர்2018:  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் புழல் சிறையில் உள்ள 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார். இதில் முதல் வகுப்பு அறையில் 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 எப்எம்., ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை: 14th செப் 2018:

சென்னையில் உள்ள புழல் சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் புழல் சிறையில் இருக்கும் 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார்என்றும் , அதில் முதல் வகுப்பு அறையில் 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 2 எப்எம்., வானொலிப்பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts