குருகிராம்:செப்டம்பர் 14, 2018
அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் 19 வயது மாணவி . நல்லா படிக்கக்கூடிய அந்த பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்.
அந்த பெண் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் காரில் இருந்த 3 நபர்கள் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இவர்களுடன் சிலரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது .பிறகு பெண் சுயநினைவை இழக்க அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க மறுத்த பிறகு காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.