டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது.
மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.