டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் , மயவாதிடம் 2 தொகுதிகளை இழந்தது பாஜக. கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.