சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம் சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக சொத்து வரி மதிப்பை மதிப்பீடு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டத்தை மீறிய செயல் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Petition against Property tax hike of TN Govt

Related posts