சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “தமிழகத்தில் 5 ஆயிரத்து 970 வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதிக்கான தொகையை செலுத்தவில்லை. எனவே, அவர்களை 5,970 பேரையும் வழக்கறிஞர் தொழில் இருந்து இடைநீக்கம் செய்கிறோம். இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்,உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக ஆஜராக கூடாது”என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Advocates suspended for non-payment of fee
CHENNAI: The Bar Council of India on Thursday suspended 5,970 advocates from practising law till they pay the pending subscription fee of the Advocates Welfare Fund (AWF).
All the suspended lawyers have at least 25 years of practice behind them.
The Advocates Welfare Fund (BCI) Committee has resorted to issuing several notices and warnings to the lawyers asking them to clear the dues to avoid such action.
The Supreme Court has made it clear that lawyers who do not subscribe to the fund cannot be permitted to practise before any court in the country. As per Rule 40, Chapter-II, Part VI of the Bar Council of India Rules, every person who enrols as an advocate is mandated to subscribe to the Advocates Welfare Fund (BCI). It must be renewed every three years. From 1993, the subscription was converted to lifetime and was collected mandatorily during enrolment.
However, advocates who enrolled before 1993, continue to pay the subscription on a yearly basis. As the number of defaulting advocates were found to be over 7,000, last November, the bar council issued notice to all the defaulting lawyers and published the list on the official website of the state bar council.
Despite the notices and warnings, 5,970 advocates failed to make the pending payments within the stipulated time, inviting suspension.
On March 21, the Advocates Welfare Fund committee passed a resolution unanimously suspending the defaulting attorneys. Subsequently, through a communication dated March 23, C Raja Kumar, secretary to the Bar Council of Tamil Nadu and Puducherry, informed the suspension officially.
“It is hereby informed that the Advocates Welfare (BCI) committee has suspended the right of practice of 5,970 advocates in any court, tribunal or other authority till the payment of subscription under Rule 40, Part VI Chapter II of the Bar Council of India Rules vide Resolution No 242/2019 dated March 22,” the communication said.