கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன

3-year-old boy brutally beaten up by tutor in Kolkata

3-year-old boy brutally beaten up by tutor in Kolkata
3-year-old boy brutally beaten up by tutor in Kolkata

கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்களது 3 வயது ஆண் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தர டியூஷன் ஆசிரியை ஒருவரை கடந்த ஜூலை 15 ஆம் தேதி நியமித்தனர். இவர் தினமும் மாலை குழந்தைக்கு பாடங்கள் சொல்லித் தந்தார். டியூஷனுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குழந்தையை தினமும் அறைக்குள் அழைத்து சென்றதும் கதவை ஆசிரியை பூட்டிக் கொள்வார். பின்னர், குழந்தையை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். தினமும் குழந்தை அழும் சத்தம் கேட்ட பெற்றோர், ஆசிரியையிடம் விசாரித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றார்.இதையடுத்து, அறையில் இருந்த ரகசிய கேமரா பதிவுகளை பெற்றோர் பார்த்தனர். அதில், அந்த ஆசிரியை தினமும் கொடூரமாகக் குழந்தையை அடிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.இதையடுத்து, ஆசிரியையிடம் பெற்றோர் மீண்டும் விசாரித்துள்ளனர். பயந்துபோன ஆசிரியை, ‘இனிமேல் இதுபோல நடக்காது, காவல்துறையில புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்‘ என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் ஆசிரியைக்கு வேலை பறிபோனது. இது பற்றி தனது கணவரிடம் ஆசிரியை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியையின் கணவர், பெற்றோரைச் சந்தித்து, காவல்துறையில் புகார் கொடுக்ககூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தையை அடித்தது மற்றும் புகார் அளிக்கக்கூடாது என்று மிரட்டியது தொடர்பாக காவலு துறையில் பெற்றோர் புகார் அளித்தனர். இதை அறிந்த ஆசிரியையை தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

3-year-old boy brutally beaten up by tutor in Kolkata

Police have expanded its search to areas adjoining the city to trace the woman tutor caught on camera brutally beating up a three-year-old at his home here. “We have not been able to arrest her till now but we have expanded our area of search in nearby and surrounding areas of Kolkata. The address that she had given to the family members of the child when she was appointed was found to be false,” said Ashok Sen, officer-in-charge of Lake Town police station. “We are tracing her mobile number too she will be arrested very soon,” he added. The Chief Minister’s Office has been informed of the incident, Sashi Panja, state Children and Women’s Welfare Minister told PTI when contacted. The incident came to light yesterday after a CCTV footage showed the tutor mercilessly beating the kid in a Lake Town home. The complaint lodged by the kid’s family said the tutor, who was appointed just a few days back, had apologised and requested the kid’s family not to inform the police. But the family registered the police complaint after her husband came and threatened them not to lodge a complaint.

Related posts