ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சம்மந்தப்பட்ட 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: அக்டோபர் 09, 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: அக்டோபர் 09, 2018

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இப்போது இதுகுறித்த விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

Related posts