இந்திய குடியுரிமையை நிரூபிக்க அசாம் நபர் தற்கொலை

Supreme court of India

இந்திய குடியுரிமையை நிரூபிக்க சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஆண் தற்கொலை செய்து கொண்டார்.

மோரிகான்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) பெயர் இடம் பெற்றிருந்த போதிலும், இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கக் கோரி வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் போராடிய அசாமின் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்டார் .இறந்தவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

போர்கால் கிராமத்தைச் சேர்ந்த இந்த முதியோரின் குடும்பத்தின் கூற்றுப்படி, மாணிக் தாஸ் தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க தீர்ப்பாயத்தில் நடந்த நடவடிக்கைகளில் கலந்துகொண்டபோது அவர் எதிர்கொண்ட “விரக்தி மற்றும் மன சித்திரவதை” காரணமாக தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.“இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. போலீசார் ஏன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு பதிவு செய்தனர் என்று தெரியவில்லை. என் தந்தையின் பெயர் என்ஆர்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த செயல்முறையின் காரணமாக அவர் விரக்தியடைந்தார் மற்றும் மன சித்திரவதைகளை எதிர்கொண்டார், ”என்று தாஸின் இளைய மகள் கூறினார்.

தாஸ் தனது பெயரில் பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் நிலப் பதிவுகள் போன்ற செல்லுபடியாகும் சட்டப்பூர்வ அடையாள ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருப்பதாகவும் அவருடைய இளைய மகள் கூறி உள்ளார் .

தாஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என்றும், செவ்வாய்கிழமை மாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர். “உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் பார்வையில் இது ஒரு தற்கொலை வழக்கு, ஆனால் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அதை உறுதியாகக் கூற முடியும், ”என்று அதிகாரி ஒருவர் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா விடம் தெரிவித்தார்.

இருப்பினும், மோரிகான் துணைக் காவல் கண்காணிப்பாளர் (எல்லை) டி ஆர் போரா, குடும்பப் பிரச்சனைகள் தாஸை தீவிர நடவடிக்கை எடுக்கத் தூண்டியிருக்கலாம் என்றார். “எப்டி வழக்குடன் தற்கொலை என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. தற்கொலைக்கான காரணம் வீட்டுப் பிரச்சினைகளாக இருக்கலாம்,” என்று அவர் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா விடம் தெரிவித்தார். தாஸ் மீதான வழக்கு 2004 இல் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்டது.

Related posts